சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் இல்லாதபோதும், லேசான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
   இதுதொடர்பாக மையம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது;-
   வரும் மூன்று நாள்களுக்கான வானிலையில், வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை 6 மில்லி மீட்டர் அளவு பெய்யக்கூடும். காற்று மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் தென் மேற்கில் இருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 95 டிகிரியும், குறைந்தபட்சம் 77 டிகிரியுமாக இருக்கும்.
   சிறப்பு வானிலை ஆலோசனை: தென் மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இல்லாதபோதும், அதன் இயல்பான தாக்கம் காரணமாக, மாவட்டத்தின் சில பகுதிகளில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 8 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும். கடந்த வாரம் அதிக காற்று மற்றும் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலையால், கோழிகளில் அதிக தீவன எடுப்புடன், தீவன விரயமும் ஏற்பட்டது. ஆனால், இனி வரும் மூன்று நாள்களுக்கும் அத்தகையளவிலான தீவன எடுப்போ, தீவன விரயமோ ஏற்படாது. இருப்பினும், உயர் மனைகளின் பக்கவாட்டுகளில் படுதாக்களை பருவமழை முடியும் வரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai