"சமூக முன்னேற்றத்துக்கு இளைஞர்கள் பாடுபட வேண்டும்'

ரோட்டரி சங்கம் வாயிலாக இளைஞர்கள் சமூக முன்னேற்றத்துக்குப் பாடுபடவேண்டும் என்று

ரோட்டரி சங்கம் வாயிலாக இளைஞர்கள் சமூக முன்னேற்றத்துக்குப் பாடுபடவேண்டும் என்று ரோட்டரி மாவட்டம் 3000-இன் முன்னாள் ஆளுநரும், தென்னிந்தியா, இலங்கை, மாலத்தீவின் பப்ளிக் இமேஜ் ஒருங்கிணைப்பாளருமான ராஜதுரை மைக்கேல் தெரிவித்தார்.
 குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் ரோட்ராக்ட் சங்கங்கள் தொடக்க விழா, நிர்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதில், ராஜதுரை மைக்கேல் பேசியது:-
 இளைஞர்கள் ரோட்டரி சங்கம் வாயிலாக, சமூக முன்னேற்றத்துக்குப் பாடுபடவேண்டும். ரோட்ராக்ட் சங்கம் இளைஞர்களுக்கு புதிய நண்பர்களை உருவாக்குதல், சேவை செய்ய ஊக்கம் அளித்தல், தங்களை வளர்த்துகொள்ளுதல் ஆகிய மூன்று மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது. ஒவ்வொருவரும் தங்களை மேம்படுத்திக் கொள்ள ரோட்ராக்ட் ஊக்கமளிக்கிறது என்றார்.
 விழாவில் இந்தியாவின் மதிப்பு மிக்க 50 பெண்மணிகளில் ஒருவர் என்ற பட்டங்களைப் பெற்ற ரிதிஷா நிவேதா பேசியது;-
 மாணவர்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தி கனவுகளை அடையுங்கள். தாமதம் ஏதும் ஏற்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். புதிதாக ஒன்றைக் கற்றுகொள்ளவோ, முயற்சிக்கவோ வயது ஒரு தடையில்லை.
 உலகில் சாதிக்க முடியாத துறை என்பது எதுவும் இல்லை. மேலும் பெண்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்றார்.
 எக்ஸல் கல்வி நிறுவனத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்காக "ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் எக்செல் எலைட்" சங்கத்திலும், 30 வயதுக்குள்பட்ட பேராசிரியர்களுக்காக ரோட்டராக்ட் கிளப் ஆஃப் எக்செல் கம்யூனிட்டியும், மேலும், 5 புதிய ரோட்ராக்ட் சங்கங்களும் தொடங்கப்பட்டுள்ளன.
 விழாவுக்கு ரோட்டரி மாவட்டம் 2982-இன் ஆளுநரும், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவருமான ஏ.கே.நடேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி.சிவசுந்தரம், ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் ஆஃப் எக்செல் எலைட்டின் தலைவர் வி.கே.சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com