சுடச்சுட

  

  நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் புதன்கிழமை கல்லூரிப் பேரவை தொடக்க விழா நடைபெற்றது.
  நாமக்கல்-திருச்சி சாலையில் அமைந்துள்ள கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் புதன்கிழமை காலை கல்லூரி பேரவை தொடக்க விழா நடைபெற்றது.  விழாவுக்கு, முதல்வர் சுகுணா தலைமை வகித்தார்.  சிறப்பு அழைப்பாளாராக நாமக்கல் நகராட்சி கமிஷனர் கே.எம்.சுதா பங்கேற்றார்.  அவர், தூய்மை இந்தியா, சுகாதாரம், நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு மற்றும் பெண் பாதுகாப்பு குறித்து பேசினார். தொடர்ந்து,  பேரவைத் தலைவராக சௌமியா, துணைத் தலைவராக திவ்யா, செயலாளராக பிரீத்தி மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.  அவர்களுக்கு கல்லூரி முதல்வர் சுகுணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின், முதல்வர் உறுதிமொழி வாசிக்க,   பேரவை உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். விழாவில், கணிதத் துறை தலைவர் எமீமாள் நவஜோதி உள்ளிட்ட துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai