சுடச்சுட

  

  நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கணினி அறிவியல் துறை சார்பில் "தரவு அறிவியல் மற்றும் பன்முகத் திட்டங்களில் பகுப்பாய்வு" எனும் தலைப்பில் ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் அண்மையில்
  நடைபெற்றது. 
  இக் கருத்தரங்கிற்கு கல்லூரிதத் தாளாளர் மருத்துவர். பொ. செல்வராஜ் தலைமை வகித்தார்.  செயலர் கவீத்ராநந்தினி பாபு, நிர்வாக இயக்குநர் கி.சி. அருள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கல்லூரி முதல்வர் ந. இராஜவேல் வரவேற்புரையாற்றினார்.  துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  
  கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக செளதி அரேபியா கிங் காலித் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் தேவி கலந்து கொண்டு, தரவு அறிவியல் மற்றும் பகுப்பாய்வின் முக்கியத்துவம் மற்றும் அதன் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி மாணவர்கள் பயனுறும் வகையில் தெளிவாகக் கூறினார்.  இதில், பல்வேறு கல்லூரிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு, தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சுவர் ஒளிப்படம் மற்றும் வாய்மொழி வழியாக சமர்ப்பித்தனர்.  இந்த ஆய்வுக் கட்டுரைகள் குறுந்தகடு வடிவில் வெளியிடப்பட்டன.  முடிவில்,  துணை முதல்வரும், கணினி துறைத் தலைவருமான கே.கே.கவிதா நன்றி கூறினார். கருத்தரங்கு ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai