சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவின் புதிய துணை காவல் கண்காணிப்பாளராக ஆர்.கணபதி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.  
  கடந்த 1987-ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், ராமநாதபுரம், நீலகிரி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பணியாற்றிய பின், சி.பி.சி.ஐ.டி.யில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றினார்.  2011-இல் துணை காவல் கண்காணிப்பாளர் பதவி உயர்வு கிடைத்தது.  திருவாரூர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் பணியாற்றி விட்டு, தற்போது நாமக்கல் மாவட்டத்தில் சமூக நீதி பிரிவின் துணை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு மற்றும் காவல் துறையினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai