முத்தாயம்மாள் கல்லூரியில் பட்ட வகுப்புகள் துவக்க விழா

ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினீயரிங் காலேஜ் மற்றும் முத்தாயம்மாள் காலேஜ் ஆப் இன்ஜினீயரிங்

ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினீயரிங் காலேஜ் மற்றும் முத்தாயம்மாள் காலேஜ் ஆப் இன்ஜினீயரிங் ஆகியவற்றின் 2019-20ம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு  பி.இ., பி.டெக் பட்ட வகுப்புகளின் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. 
துவக்க விழாவில் முத்தாயம்மாள் எஜிகேசனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் தாளாளர் ஆர்.கந்தசாமி  தலைமை வகித்தார்.   செயலாளர் கே.குணசேகரன் முன்னிலை வகித்து,  மாணவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்காக கல்லூரியில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வசதி வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  பிறகு படித்துக் கொள்ளலாம், என்று நினைத்து ஒவ்வொரு செயலையும் ஒத்தி வைத்துக் கொண்டே போனால், காலம் நம்மை ஒத்தி வைத்து, உலகம் நம்மை ஒதுக்கி வைத்துவிடும்.  ஆகவே, படிக்கின்ற நான்கு வருட காலங்களிலேயே  மாணவர்கள் திறமைகளை எந்தெந்த தொழில் நுட்பங்களை புதிதாகக் கற்றுக் கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில்,  கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில்,   இன்ஜினீயரிங் துறையைத்  தேர்ந்தெடுத்துள்ள மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும்,  எந்த இடத்திலும் பணிபுரிய உடலையும், மனதையும் தயார்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். 
வாய்ப்பு என்பது நம்மை தேடி வராது.  வாய்ப்பைத் தேடிப்போகின்றவர்களால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.  பாடத் திட்டத்தோடு நல்ல பழக்க வழக்கங்களையும், நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  பாடத் திட்டத்தில் உள்ள அறிவைத் தவிர்த்து புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொண்டு,  ஆங்கில மொழியில் தகவல் பரிமாற்றுத் திறனை பெற்றுள்ள மாணவர்களால் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் எளிதாக வேலைவாய்ப்பைப் பெறமுடியும் என்று குறிப்பிட்டு பேசினார்.
கல்லூரி டிரஸ்டி அம்மணி கந்தசாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்  உமாராணி குணசேகரன் இணைச் செயலாளர்  ஜி.ராகுல் , கல்லூரி முதல்வர்கள் எம்.மாதேஸ்வரன், பி.வேணுகோபால், டீன். ஜி.சுடர்மொழி, எஸ்.ராமுப்பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com