நியாயவிலைக் கடைகளில் ஆட்சியர் ஆய்வு

குமாரபாளையம் பகுதியில் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோகத் திட்டப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர்

குமாரபாளையம் பகுதியில் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோகத் திட்டப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கீழ் தட்டாங்குட்டை ஊராட்சி, ஓலப்பாளையத்தில் செயல்படும் அமுதம் விற்பனை நிலையத்துக்குள்பட்ட நியாயவிலைக் கடைக்குச் சென்ற ஆட்சியர் மு.ஆசியா மரியம், பொருள்களின் இருப்பு, விற்பனை, விற்பனை தொகை ஆகியவற்றை அதிநவீன விற்பனை முனைய கருவியை இயக்கி ஆய்வு செய்தார். மேலும், அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் இருப்பும் சரிபார்க்கப்பட்டது. விற்பனை செய்யப்பட்ட அனைத்து பொருள்களின் விற்பனை கருவியில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும் சரிபார்த்தார். இதேபோன்று, ஜேகேகே நடராஜா நகர், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் நியாயவிலைக் கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, குமாரபாளையம் வட்டாட்சியர் தங்கம் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com