மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்: அதிகாரிகள் விளக்கம்

மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் தொடர்பாக விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தனர்.

மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் தொடர்பாக விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தனர்.
 நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டாரம் கல்குறிச்சி கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிப் பயிர்களில் மாவுப் பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து, பூச்சியியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் கீதா, நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் புஷ்பநாதன் ஆகியோர், மாவு பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளுக்கு நேரடியாக விளக்கம் அளித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட செடிகளை அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
 கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த நசிகேதன், முருகேசன் உள்ளிட்ட விவசாயிகளுக்கு மாவுப் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதில், மாவுப் பூச்சி தாக்குதலின் அறிகுறிகளாகக் கருதப்படுவது, மரவள்ளியின் இளம் தளிர், தண்டு மற்றும் இலையின் அடிப்பரப்பில் இருந்து பூச்சிகள் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். நுனி குருத்துகள் உருமாறியும், வளர்ச்சி குன்றியும் காணப்படும். செடிகளின் நுனியில் உள்ள இலைகள் ஒன்றாக இணைந்து முடிகொத்தாக தோற்றமளிக்கும். தண்டின் இடைக்கணுக்கள் நீளம் குறைந்து சேதமடைந்திருக்கும்.
 இவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளாக கூறப்படுவது: மாவுப் பூச்சி தாக்குதலானது மரவள்ளி பயிரின் நுனி குருத்தில் அதிகமாக இருப்பதால் நுனிகுருத்தை பறித்து எரித்து விடவேண்டும். இதன் மூலம் பூச்சி தாக்குதலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம்.
 அசரோபேகஸ் பப்பாயே என்னும் மாவு பூச்சிக்கான ஒட்டுண்ணி மூலமும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com