முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்படுகிறது.
 இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: பொதுமக்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காணும் பொருட்டு தமிழக அரசால் "முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை திங்கள்கிழமை முதல்வர் தொடக்கி வைத்தார்.
 நாமக்கல் மாவட்டத்தில் இத் திட்டம் வியாழக்கிழமை (ஆக.22) தொடக்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, நகரப் பகுதிகளில் வார்டுகளிலும், ஊரகப் பகுதிகளில் கிராமங்கள் தோறும் நேரடியாகச் சென்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறுவதற்கு வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் பிற துறைகள் அடங்கிய அலுவலர்களை கொண்ட குழு மாவட்ட ஆட்சியரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 அதன்படி, நாமக்கல் வட்டத்தில் 5 குழுக்கள், சேந்தமங்கலம் வட்டத்தில் -4 , கொல்லிமலை வட்டத்தில் - 1, மோகனூர் வட்டத்தில் 4, ராசிபுரம் வட்டத்தில் 6, பரமத்திவேலூர் வட்டத்தில் 4, குமாரபாளையம் வட்டத்தில் 4, திருச்செங்கோடு வட்டத்தில் 7 குழுக்கள் என மொத்தம் 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 மனுக்கள் பெறப்படும் இடம் மற்றும் நேரம் குறித்து ஒலிபெருக்கி, துண்டுப் பிரசுரம், தண்டோரா மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படும். மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், தெரு விளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கு இத் திட்டத்தில் தீர்வு காணப்படும். பொதுமக்கள் இத்திட்டத்தில் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com