புதிய ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, புதிய ஊதியக்குழு  பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, புதிய ஊதியக்குழு  பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில இந்திய அஞ்சலக ஓய்வூதியர்கள் சங்கத்தின், மாநில செயற்குழுக் கூட்டம், நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இரு நாள்கள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவுக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் எம்.கண்ணையன் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.கே ராமசாமி வரவேற்புரையாற்றினார்.  அகில இந்திய பொதுச் செயலாளர் ராகவேந்திரர் நிறைவு உரையாற்றினார்.  அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரராஜா, மாநில உதவி பொதுச் செயலாளர் மோகன், மாநில துணைத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் தொடர்பாகப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை, ஆப்சன்-1 எனும் ஆண்டு ஊதிய உயர்வினைக் கணக்கிட்டு, புதிய ஊதியக் குழு அடிப்படையில் ஓய்வூதியம் நிர்ணயம் செய்யவேண்டும்.  ராணுவத் துறையில் அமல்படுத்தப்பட்டது போல் இருந்திட வேண்டும். அஞ்சல் துறையில் தபால்காரர்கள், மெயில் கார்டு ஊழியர்களின் ஊதியத்தை 1.1.1996  முதல் உயர்த்தி நிர்ணயிக்கும், 23.5.2018 அன்று அஞ்சல் இலாகா பிறப்பித்த உத்தரவை விரைவாக அமல்படுத்த வேண்டும். மத்திய சுகாதார திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள, அஞ்சலக ஊழியர்கள் சிகிச்சைக்கான மருத்துவமனைகளில், அங்கு பணிபுரிய தேவையான பாரா மெடிக்கல் ஊழியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். 
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற கூட்ட முடிவின்படி, செப்டம்பர் 13-ஆம் தேதி பிரதமர் மோடிக்கு மனு அனுப்புவது,  அதே நாளில், கோட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது,  செப்டம்பர் 15 முதல் 30-ஆம் தேதி வரையில் மக்களவை உறுப்பினர்களைச் சந்தித்து ஆதரவு கோருவது,  அக்டோபர் 15-ஆம் தேதி கோட்ட அளவில் தர்னாவில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இச் செயற்குழுவில், மாநில,  மாவட்ட அளவில் நிர்வாகிகள் பலர் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com