முட்டை விலை மேலும் 18 காசுகள் சரிந்து ரூ.3.40-ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 18 காசுகள் சரிந்து ரூ,.3.40-ஆக வெள்ளிக்கிழமை நிர்ணயிக்கப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 18 காசுகள் சரிந்து ரூ,.3.40-ஆக வெள்ளிக்கிழமை நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, திங்கள்கிழமை முதல் தினசரி முட்டை விலை நிர்ணயத்தை அமல்படுத்தியுள்ளது.  அதன்படி, செவ்வாய்க்கிழமை 3 காசுகள் உயர்த்தப்பட்டது. வியாழக்கிழமை 10 காசுகள் குறைக்கப்பட்டது. இந்த நிலையில்,  பிற மண்டலங்களில் தொடர்ந்து முட்டை விலை சரிவடைந்து வருவதையடுத்து, வெள்ளிக்கிழமை நாமக்கல் மண்டலத்தில் 18 காசுகள் வீதம் குறைக்கப்பட்டன.  இதனால், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.40-ஆகச் சரிந்துள்ளது. சென்னை மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் குறைக்கப்பட்டு,  ரூ.3.55-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புதிய அறிவிப்பில்,  இனிமேல் தினசரி முட்டை விலை நிர்ணயமானது காலை 9 மணிக்குக் கிடையாது என்றும், நிர்வாகக் காரணங்களினால் முதல் நாள் இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் (காசுகளில்): ஹைதராபாத்-310, விஜயவாடா-330, பார்வாலா-314,  மைசூரு-345, ஹோஸ்பெட்-300,  சென்னை-355, மும்பை-365, பெங்களுரு-335, கொல்கத்தா-377, தில்லி-337.
இதேபோல்,  பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.66-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com