Enable Javscript for better performance
நகராட்சி, பேரூராட்சிகளில் ஆடு வதைக் கூடங்கள் பயன்பாட்டுக்கு வருமா?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நகராட்சி, பேரூராட்சிகளில் ஆடு வதைக் கூடங்கள் பயன்பாட்டுக்கு வருமா?

    By DIN  |   Published On : 25th August 2019 03:46 AM  |   Last Updated : 25th August 2019 03:46 AM  |  அ+அ அ-  |  


     நாமக்கல் மாவட்டத்தில், ஆடு வதைக் கூடங்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளதால்,  இறைச்சிக்காக ஆடுகளை சாலையில் வைத்து வதை செய்யும் சூழல்காணப்படுகிறது.
    தமிழகத்தில், மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில், ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதென்றால்,  அதற்கென உள்ள வதைக் கூடங்களில் வைத்தே வெட்ட வேண்டும்.  அதன்பின் அங்கிருந்து அவற்றை விற்பனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அரசு விதிகள் உள்ளன.  மேலும், இந்த வதைக் கூடங்களானது ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விடப்படுகிறது.  அவர்கள், ஆடு,  மாடுக்கு குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயம் செய்து,  சம்பந்தப்பட்ட இறைச்சிக் கடை விற்பனையாளர்களிடம்வசூலிப்பர்.
    கடந்த சில ஆண்டுகளாக இந்த  நடைமுறை மாற்றப்பட்டு,  சாலைகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஆடு, மாடுகள் இறைச்சிக்கு வெட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுவர்கள், பெண்கள், முதியோர் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர்.  உணவு பாதுகாப்புத் துறை சார்பில் எச்சரிக்கை விடுத்தபோதும்,  ஆடு வதைக் கூடங்களைப் பயன்படுத்த இறைச்சி விற்பனையாளர்கள் யாரும் முன்வருவதில்லை.  ஒப்பந்தம் எடுத்தவர்களும் நேரடியாக அந்தக் கடைகளுக்குச் சென்று தங்களுக்கான கட்டணத்தை வசூலித்து விடுகின்றனர்.
              நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சிப் பகுதிகளிலும், மோகனூர், பரமத்திவேலூர், நாமகிரிப்பேட்டை,  மல்லசமுத்திரம், வெண்ணந்தூர் ஆகிய பேரூராட்சிகளிலும் ஆடு வதைக் கூடங்கள் உள்ளன.  இவற்றில், மூன்று பேரூராட்சிப் பகுதிகளில் மட்டும் தற்போது வதைக் கூடங்கள் செயல்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது.  மற்ற வதைக் கூடங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வர உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் முயற்சி மேற்கொண்டாலும்,  உள்ளாட்சி நிர்வாகத்திடம் இருந்து போதிய ஒத்துழைப்பு அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.  இதனால்,  நகர்ப்புற சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி வருகிறது.
    இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் புஷ்பராஜன் கூறியது;  ஆடு வதைக் கூடங்களை முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வாருங்கள் என நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.  நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 வதைக் கூடங்களில் 7 செயல்படவில்லை.  மூன்று மட்டும் பயன்பாட்டில் இருக்கின்றன.  சம்பந்தப்பட்ட வதைக் கூடங்களை ஒப்பந்தம் எடுத்தோரும் அதற்கான அக்கறை காட்டுவதில்லை.  நேரடியாக கடைகளில் சென்று கட்டணத்தை வசூலிக்கின்றனர். நகராட்சி,  பேருராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தவறான தகவல்களைக் கூறுகின்றனர்.  இதனால்,  உயர் அதிகாரிகள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சூழல் உள்ளது.  இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் உள்ளது என்றார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp