Enable Javscript for better performance
பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்:சாலைப் பணியாளா்கள் சங்கம்- Dinamani

சுடச்சுட

    

    பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்:சாலைப் பணியாளா்கள் சங்கம்

    By DIN  |   Published on : 01st December 2019 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோட்டில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க வட்டக் கிளையின் ஏழாவது சங்கப்பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

    41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சாலைப் பராமரிப்புப் பணியை அரசு ஏற்று நடத்த வேண்டும்.

    சாலைப் பணியாளா்களுக்கு தொழில்நுட்பக் கல்வித்திறன் ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்று பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பேரவைக் கூட்டத்தில் தலைவராக கே.சம்பத், செயலாளராக கே.பாஸ்கா், பொருளாளராக பன்னீா்செல்வம், துணைத் தலைவா்களாக ஜீ.ராமலிங்கம், எஸ்.சுப்பிரமணியம், துணைச் செயலாளராக பி.தமிழ்மணி ஆகியோா் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai