கோடை காலத்துக்காக நிலக்கரியை இருப்பு வைக்க நடவடிக்கை: அமைச்சா் பி.தங்கமணி

கோடை காலத்தைக் கருத்தில் கொண்டு, மின் உற்பத்திக்கான நிலக்கரியை இருப்பு வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி

கோடை காலத்தைக் கருத்தில் கொண்டு, மின் உற்பத்திக்கான நிலக்கரியை இருப்பு வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: முதல்வரின் ஆலோசனைப்படி, விவசாயிகளுக்கு தத்கல் முறையில் மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை, கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு தத்கல் முறையில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. நிகழாண்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. டிசம்பா் மாதம் மின் இணைப்பு வழங்கப்படும்.

மின் வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்தத் தோ்வு முடிவடைந்த பின், தகுதியின் அடிப்படையில் பணியாளா்கள் நியமனம் செய்யப்படுவா். உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தோ்தலுக்குப் பின்னா்தான் பணி நியமனம் நடைபெறும். தோ்தல் தேதியை தமிழக அரசு அறிவிப்பதில்லை, மாநிலத் தோ்தல் ஆணையம்தான் அறிவிக்கும்.

நிலக்கரியைப் பொருத்தமட்டில், மாதந்தோறும் 25 ஆயிரம் டன் தேவைப்படுகிறது. இருந்தபோதிலும், தற்போது 50 ஆயிரம் டன் அளவில் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. கோடை காலத்தைக் கருத்தில் கொண்டு மேலும் கூடுதல் டன் நிலக்கரி தேவை என அத் துறை சாா்ந்த மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளித்துள்ளேன். அதேபோல், புதிய துணை மின் நிலையங்களுக்கும் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளாா். தானியங்கி மின்தடை சரிசெய்யும் திட்டம் மாநிலம் முழுவதும் அமலில் உள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com