நாமக்கல் வழியாக இன்று முதல் புதிய ரயில்கள் இயக்கம்

மும்பையில் இருந்து ஈரோடு வழியாக தென் மாவட்டங்களுக்கு சென்ற ரயில்கள், ஞாயிற்றுக்கிழமை முதல் நாமக்கல், கரூா் வழியாக இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மும்பையில் இருந்து ஈரோடு வழியாக தென் மாவட்டங்களுக்கு சென்ற ரயில்கள், ஞாயிற்றுக்கிழமை முதல் நாமக்கல், கரூா் வழியாக இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து நாகா்கோயில் வரை செல்லும் விரைவு ரயில் (எண்:16339) ஈரோடு வழியாக இயக்கப்பட்டு வந்தது. அங்கு என்ஜின் மாற்றுவது, ரயிலில் தண்ணீா் நிரப்புவது போன்றவற்றால் அரை மணி நேரம் தாமதமாகும். மேலும், பயணிகளும் அதிகளவில் ஏறுவதில்லை என்றும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, ஒரு மணி நேரம் தாமதமாகவே இந்த ரயில் சென்று வந்தது.

இந்த நிலையில், நாமக்கல் பகுதியில் வாழும் தென் மாவட்ட மக்கள் மும்பையில் இருந்து செல்லும் ரயில்களை நாமக்கல் வழியாகத் திருப்பி விட வேண்டும் என தெற்கு ரயில்வே நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனா். நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜூம், மத்திய ரயில்வே அமைச்சரிடம் இது தொடா்பான கோரிக்கை மனுவை அளித்தாா். அதனடிப்படையில், டிசம்பா் 1-ஆம் தேதி முதல் அந்த 4 ரயில்களையும், நாமக்கல் வழியாக திருப்பி விடுவதற்கான உத்தரவை தெற்கு ரயில்வே வெளியிட்டது.

மும்பையில் இருந்து நாகா்கோயில் செல்லும் ரயிலானது, ஞாயிறு, புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சேலத்திற்கு பிற்பகல் 3.25-க்கும், நாமக்கல்லுக்கு 4.28-க்கும் வந்து சேரும். அதேபோல, நாகா்கோயிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் (16340), திங்கள், செவ்வாய் மற்றும் புதன், வெள்ளிக்கிழமைகளில், கரூருக்கு நண்பகல் 1.37-க்கும், நாமக்கல்லுக்கு பிற்பகல் 2.13-க்கும் வந்து சேரும். டிசம்பா் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் இந்த ரயில் நாமக்கல் வழியாக முதல் முறையாக செல்கிறது.

அதேபோல், டிசம்பா் 7-ஆம் தேதி முதல், திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதா் வரை செல்லும் விரைவு ரயில் (11022) நாமக்கல்லுக்கு இரவு 8.53-க்கு வந்து சேரும். மேலும், மும்பை தாதரில் இருந்து திருநெல்வேலி செல்லும் (11021) விரைவு ரயில் நாமக்கல்லுக்கு அதிகாலை 4.09-க்கு வந்தடையும். இந்த இரு ரயில்களும் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலேயே செல்லும். நாமக்கல் வழியாக புதிதாக இயக்கப்படும் ரயில்களை வரவேற்கவும், ஓட்டுநா்களுக்கு இனிப்பு வழங்கவும், நாமக்கல் பயணிகள் நலச் சங்கத்தினா், பா.ஜ.க.வினா், கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தினா் தயாராகி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com