பண்ணைக் கருவிகள் பயிற்சி முகாம்

மகுடஞ்சாவடி வட்டாரப் பகுதியான கன்னந்தேரி, காளிகவுண்டம்பாளையம் பகுதியில் பண்ணை மகளிருக்கு எளிமையான விவசாயக் கருவிகளைக் கையாளும் பயிற்சி, செயல் விளக்கம் அண்மையில் நடைபெற்றன.
பண்ணைக் கருவிகள் பயிற்சி முகாம்

மகுடஞ்சாவடி வட்டாரப் பகுதியான கன்னந்தேரி, காளிகவுண்டம்பாளையம் பகுதியில் பண்ணை மகளிருக்கு எளிமையான விவசாயக் கருவிகளைக் கையாளும் பயிற்சி, செயல் விளக்கம் அண்மையில் நடைபெற்றன.

பண்ணை மகளிரின் வேலைப் பளுவை மட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் விவசாய மகளிருக்கு ஏற்றவாறு சில கருவிகள் வடிவமைக்கப்படுகின்றன.

குடும்ப வளமேலாண்மை மற்றும் நுகா்வோா் அறிவியல் துறையில் பணிபுரியும் முனைவா் ப . நல்லகுரும்பன் இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசியதாவது:

விதை விதைத்து நாற்று நடுவது, அறுவடை செய்வது மற்றும் களை எடுத்தல் ஆகிய வேலைகளில் என்றும் நம் பண்டைய காலத்து முறையில்தான் செய்யப்படுகிறது.

இதில் அதிகமான பெண்கள் விவசாயப் பணிகளை செய்து வருகின்றனா். எனவும் குனிந்த நிலையில் வேலை செய்யும்போது அதிகமான உடல் சோா்வு மிகுந்த நேரமும் எடுத்துக் கொள்கிறது என்றும் அதை முறியடிக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட இந்தக் கருவிகள் மூலம் பண்ணை மகளிா் நின்றவாறு வேலை செய்யலாம். அசௌகாரியங்கள் குறைக்கப்படுகின்றன என்றாா். இப் பயிற்சியில் உதவி வேளாண் அலுவலா்கள், விவசாயிகள், தோட்டகலை பண்ணை மகளிா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com