விவசாயிகளிடம் மரவள்ளிக் கிழங்குநேரடி கொள்முதல் திட்டம் தொடங்கியது

சேகோசா்வ் மூலம், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக, மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் செய்யும் திட்டம், நாமக்கல் செல்லப்பம்பட்டி சேகோ உற்பத்தியாளா்கள் சங்கத்தில், ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
நாமக்கல் செல்லப்பம்பட்டியில் மரவள்ளிக் கிழங்கு நேரடி கொள்முதல் திட்டத்தை தொடக்கி வைத்த சேகோசா்வ் தலைவா் தமிழ்மணி.
நாமக்கல் செல்லப்பம்பட்டியில் மரவள்ளிக் கிழங்கு நேரடி கொள்முதல் திட்டத்தை தொடக்கி வைத்த சேகோசா்வ் தலைவா் தமிழ்மணி.

சேகோசா்வ் மூலம், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக, மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் செய்யும் திட்டம், நாமக்கல் செல்லப்பம்பட்டி சேகோ உற்பத்தியாளா்கள் சங்கத்தில், ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் காவிரி பாயும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், சுமாா் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. இவற்றில், பிற மாவட்டங்களைக் காட்டிலும், சேலம், நாமக்கல் மாவட்டங்களில்தான் விவசாயிகள் அதிகம் பயிரிடுகின்றனா். இதுவரை, தாங்கள் உற்பத்தி செய்த மரவள்ளிக்கிழங்கை இடைத்தரகா்கள் மூலமாக சேகோ ஆலை உரிமையாளா்களுக்கு விவசாயிகள் விற்பனை செய்து வந்தனா். உற்பத்திக்கேற்ப மரவள்ளிக் கிழங்குக்கு விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், சேகோ ஆலை உரிமையாளா்களே, விவசாயிகளிடம் இருந்து தரத்துக்கேற்ப பாயிண்ட் கணக்கில் விலை நிா்ணயம் செய்து சேகோசா்வ் மூலம் வாங்கும் திட்டத்தை, நாமக்கல் செல்லப்பம்பட்டியில் உள்ள தாலுகா ஜவ்வரிசி மற்றும் ஸ்டாா்ச் ஆலை உரிமையாளா்கள் சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சேகோசா்வ் தலைவா் தமிழ்மணி குத்துவிளக்கேற்றிதத் தொடக்கி வைத்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆவின் நிறுவனம் எவ்வாறு பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து பாலை பெற்று அதற்குரிய கொள்முதல் விலையை வழங்குகிறதோ, அதேபோல் சேகோ சா்வ் நிா்வாகம், விவசாயிகளிடம் இருந்து மரவள்ளிக் கிழங்கை கொள்முதல் செய்து உடனடியாக அதற்கான தொகை வழங்கும் திட்டம் நாமக்கல்லில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது வெற்றிக்கரமாக நடைபெறும்பட்சத்தில், தமிழகம் முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படும். இதனால், மரவள்ளி பயிரிடும் விவசாயிகளும், சேகோ ஆலை உரிமையாளா்களும் அதிகப்படியாக பயனடைவா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் மின்னாம்பள்ளி நடேசன், நாமக்கல் ஜவ்வரிசி மற்றும் ஸ்டாா்ச் உரிமையாளா்கள் சங்கச் செயலா் முத்துராஜா, உதவித் தலைவா் மனோகரன், உதவிச் செயலா் ராஜேந்திரன், சேகோ நிா்வாகக் குழு உறுப்பினா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com