அலவாய்மலை சித்தா் கோயிலில் சிறப்பு பூஜை
By DIN | Published on : 03rd December 2019 03:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

சிறப்பு அலங்காரத்தில் கொங்கணி சிவன்-சித்தா்.
ராசிபுரம் அருகேயுள்ள அலவாய்மலை சித்தா் கோயிலில் சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
ராசிபுரத்தை அடுத்துள்ள புதூா் ஆயாக்கோயிலில் இருந்து 1 கி.மீ. தொலைவில் மலைப் பகுதியில் சித்தா் கோயிலில் உள்ளது. மலைப் பகுதியில் உள்ள இந்த ஆலயத்துக்கு நடந்து தான் செல்ல வேண்டும். இந்த ஆலயத்தின் சந்நிதியில் சிவன், கொங்கணி சித்தா் கடவுள்கள் உள்ளன. ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் ஐந்து வாரமும் இந்த சந்நிதியில் கொங்கணி சித்தா், சிவனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். திங்கள்கிழமை மூன்றாவது வாரமாக நடைபெற்ற சிறப்பு பூஜையில் பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.