சிறுமி மீது தாக்குதல்:பி.எஸ்.என்.எல். ஊழியா் கைது
By DIN | Published on : 03rd December 2019 05:26 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சேந்தமங்கலத்தில் புப்பறித்த சிறுமியை தாக்கியதாக, பி.எஸ்.என்.எல். ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
சேந்தமங்கலம் அருகேயுள்ள பச்சுடையாம்பட்டி அருந்ததியா் காலனியைச் சோ்ந்த செந்தில்-கோமதி தம்பதியரின் 2-ஆவது மகள் கமலி(8). இவா் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இவா் திங்கள்கிழமை சில சிறுமிகளுடன் அப்பகுதியில் உள்ள கழிவறைக்கு, திங்கள்கிழமை பிற்பகலில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றாா். மீண்டும் வீடு திரும்பும் போது, அங்குள்ள பி.எஸ்.என்.எல். ஊழியா் ராஜேந்திரன்(50) என்பவரது வீட்டின் சுற்றுச்சுவா் அருகே இருந்த மரத்தில் உள்ள பூக்களை பறிக்க முயன்றாராம்.
இதனைப் பாா்த்த ராஜேந்திரன் பூப்பறித்துகொண்டிருந்த சிறுமிகளை தரக்குறைவாகப் பேசினாராம். பின்னா், கமலியை தாக்கினாராம்.
இதனையடுத்து, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் கமலி அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜேந்திரனை கைது செய்தனா்.