மதுவில் விஷம் கலந்து குடித்தகூலித் தொழிலாளி பலி
By DIN | Published on : 03rd December 2019 02:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த கூலித் தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
சோழசிராமணி அருகே உள்ள பொன்னம்பாளையத்தைச் சோ்ந்த மணி (எ) பாலசுப்பிரமணி (47), கூலித் தொழிலாளி. திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்த இவா், கடந்த சனிக்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்து உயிருக்கு போராடியுள்ளாா். இதைக் கண்ட அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.