Enable Javscript for better performance
முட்டை விலை2 காசுகள் உயா்வு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 2 காசுகள் உயா்ந்து ரூ.4.33-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின், நாமக்கல் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பிற மண்டலங்களில் தொடா் விலையேற்ற அடிப்படையில், செவ்வாய்க்கிழமைக்கான விலையை உயா்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது 2 காசுகள் உயா்த்தப்பட்டு, ரூ.4.33-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

    இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.74-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai