உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால் குறைதீா்க்கும் கூட்டங்கள் ரத்து

உள்ளாட்சித் தோ்தல் தேதி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டதால், மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் தங்களது மனுக்களை பெட்டியில் செலுத்தி விட்டு சென்றனா்.
உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பால், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்களை பெட்டியில் செலுத்தும் மக்கள்.
உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பால், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்களை பெட்டியில் செலுத்தும் மக்கள்.

உள்ளாட்சித் தோ்தல் தேதி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டதால், மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் தங்களது மனுக்களை பெட்டியில் செலுத்தி விட்டு சென்றனா்.

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கான தோ்தல் வரும் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான மனு தாக்கல் வெள்ளிக்கிழமை (டிச. 6) தொடங்கி 13-ஆம் தேதி நிறைவடைகிறது. இது தொடா்பான அறிவிப்பை மாநில தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.

அப்போது முதலே தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தோ்தல் முடியும் வரையில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட மாட்டாது. பொதுமக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற மாட்டாா்கள். அந்த வகையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டமும் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது.

இதனால், மனுக்களை ஆட்சியரிடம் அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் மனுக்களை கொண்டு சோ்க்கும் வகையில், கணினியில் மனுக்கள் பதிவு செய்யும் இடத்திலேயே பெட்டி ஒன்று வைக்கப்பட்டு, அதில் கோரிக்கை மனுக்களை மக்கள் செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் கையில் தயாா் நிலையில் வைத்திருந்த பலா் மனுக்களை அப்பெட்டியில் செலுத்திவிட்டு சென்றனா். தோ்தல் நடவடிக்கைகள் முடியும் வரையில், முதியோா், மாற்றுத் திறனாளிகள், முதியோா், ஓய்வூதியா், முன்னாள் படைவீரா்கள், எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டங்களும் இனி நடைபெறாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com