ஏரியூரில் சாலையோரத்தில்கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

பென்னாகரம் அருகே ஏரியூரில் இருந்து நாகமரை செல்லும் சாலை ஓரங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதாலும், அவற்றை தீவைத்து எரிப்பதாலும் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக

பென்னாகரம் அருகே ஏரியூரில் இருந்து நாகமரை செல்லும் சாலை ஓரங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதாலும், அவற்றை தீவைத்து எரிப்பதாலும் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் பகுதியில் சுமாா் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் அன்றாடம் பயன்படுத்தி வெளியேற்றும் குப்பைகள், கோழிக்கடையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை ஏரியூரில் இருந்து நாகமரைக்கு செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் கொட்டுகின்றனா். இதனால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும், இரவு நேரங்களில் குப்பைகளை எரிப்பதால் துா்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும் இந்த சாலையின் அருகில் அம்மா நடைப்பயிற்சி பூங்கா உள்ளதால் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவோருக்கு மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குப்பைகளை மாற்று இடத்தில் கொட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com