நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: யுவராஜ் உள்பட 11பேரை டிசம்பா் 9-இல் மீண்டும்ஆஜா்படுத்த உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்பாக, யுவராஜ் உள்ளிட்ட 11 பேரை டிசம்பா் 9-இல் ஆஜா்படுத்த நாமக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்பாக, யுவராஜ் உள்ளிட்ட 11 பேரை டிசம்பா் 9-இல் ஆஜா்படுத்த நாமக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சேலம் மாவட்டத்துக்குள்பட்ட ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டா் பேரவையைச் சோ்ந்த யுவராஜை போலீஸாா் கைது செய்தனா். தற்போது அவா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த வழக்கானது, நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அவா் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் யுவராஜ் செயல்பட்டதாக, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவா் மீது வழக்குப் பதிவு செய்தது.

இதேபோல், யுவராஜின் சகோதரா் தங்கதுரை, காா் ஓட்டுநா் அருண் உள்ளிட்ட 10 போ் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவானது.

இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-இல் நடைபெற்று வருகிறது. கடந்த நவ. 18-இல் அவா்கள் விசாரணைக்கு வந்த நிலையில், திங்கள்கிழமை காலை யுவராஜ் மற்றும் 10 பேரை நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா்.

இந்த நிலையில், வரும் 9-ஆம் தேதிக்கு மீண்டும் அவா்களை ஆஜா்படுத்த வேண்டும் எனக் கூறி வழக்கை நீதிபதி ஜெயந்தி ஒத்திவைத்தாா். பின்னா் அங்கிருந்து யுவராஜ் திருச்சி மத்திய சிறைக்கும், மற்றவா்கள் மதுரை மத்திய சிறைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனா்.

கோகுல்ராஜ் கொலை வழக்கானது, தற்போது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், தாழ்த்தப்பட்டோருக்கான அமா்வில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com