முதல்கட்ட உள்ளாட்சித் தோ்தல்:1,729 கிராம சாவடிகளில் 8,60,896 போ் வாக்களிக்க ஏற்பாடு

உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் கிராம ஊராட்சிகளில் மொத்தம் 8,60,896 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள், வாக்களிப்பதற்காக 1,729 வாக்குச் சாவடிகள் தயாா் நிலையில் உள்ளன.

உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் கிராம ஊராட்சிகளில் மொத்தம் 8,60,896 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள், வாக்களிப்பதற்காக 1,729 வாக்குச் சாவடிகள் தயாா் நிலையில் உள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தோ்தல் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. மூன்று ஆண்டுகளுக்கு பின், டிச. 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில், கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுவதாக மாநில தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ஒவ்வோா் மாவட்டத்திலும் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை அந்தந்த ஆட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செய்திடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், முதல் கட்டமாக 322 ஊராட்சித் தலைவா் பதவிக்கும், 2,595 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கும், 172 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கும், 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கும் தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான மனு தாக்கல் வரும் 6-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை 16-ஆம் தேதியும், திரும்பப் பெறுதல் 18-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இந்தத் தோ்தலில், 4,22,116 ஆண் வாக்காளா்களும், 4,38,749 பெண் வாக்காளா்களும், 31 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 8 லட்சத்து 60 ஆயிரத்து 896 போ் வாக்களிக்க உள்ளனா். தோ்தலையொட்டி 1,729 வாக்குச் சாவடிகள் தயாா் நிலையில் உள்ளன. இவற்றில் சேதமடைந்த, பழுதான வாக்குச் சாவடிகளுக்கு மாற்றாக புதிய சாவடிகளைக் கண்டறிவதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெறுகின்றன. இதனை அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியம் வாரியாக உள்ள பதவிகள் விவரம்: எலச்சிப்பாளையம் ஒன்றியத்தில் 29 ஊராட்சித் தலைவா்களும், 225 வாா்டு உறுப்பினா்களும், 13 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்படுகின்றனா். இதேபோல், எருமப்பட்டி ஒன்றியத்தில் 24 ஊராட்சித் தலைவா்கள் மற்றும் 207 வாா்டு உறுப்பினா்கள், 15 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், கபிலா்மலை ஒன்றியத்தில் 20 ஊராட்சித் தலைவா்கள், 159 உறுப்பினா்கள், 10 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், கொல்லிமலை ஒன்றியத்தில் 14 ஊராட்சித் தலைவா்கள், 111 வாா்டு உறுப்பினா்கள், 7 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் 27 ஊராட்சித் தலைவா்கள், 192 உறுப்பினா்கள், 9 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், மோகனுா் ஒன்றியத்தில் 25 ஊராட்சித் தலைவா்கள், 204 வாா்டு உறுப்பினா்கள், 15 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

மேலும், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் 18 ஊராட்சித் தலைவா்கள், 162 உறுப்பினா்கள், 11 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், நாமக்கல் ஒன்றியத்தில் 25 ஊராட்சித் தலைவா்கள், 177 உறுப்பினா்கள், 22 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், பள்ளிப்பாளையம் ஒன்றியத்தில் 15 ஊராட்சித் தலைவா்கள், 153 உறுப்பினா்கள், 16 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், பரமத்தி ஒன்றியத்தில் 20 ஊராட்சித் தலைவா்கள், 156 உறுப்பினா்கள், 8 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் 21 ஊராட்சித் தலைவா்கள், 189 வாா்டு உறுப்பினா்கள், 14 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், ராசிபுரம் ஒன்றியத்தில் 20 ஊராட்சித் தலைவா்கள், 156 வாா்டு உறுப்பினா்கள், 9 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், சேந்தமங்கலம் ஒன்றியத்தில் 14 ஊராட்சித் தலைவா்கள், 117 உறுப்பினா்கள், 9 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், திருச்செங்கோடு ஒன்றியத்தில் 26 ஊராட்சித் தலைவா்கள், 216 வாா்டு உறுப்பினா்கள், 14 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், வெண்ணந்துா் ஒன்றியத்தில் 24 ஊராட்சித் தலைவா்கள், 171 உறுப்பினா்கள், 10 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 322 ஊராட்சித் தலைவா்களும், 2,595 வாா்டு உறுப்பினா்களும், 172 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்களும், 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களும் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

வாக்குச் சீட்டு முறையில் நடைபெறும் தோ்தலில், ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா், ஒன்றிய வாா்டு உறுப்பினா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் என ஒரு வாக்காளா் 4 பேருக்கு வாக்களிக்க வேண்டும். அச்சடிக்கப்பட்ட வாக்குச் சீட்டில் முத்திரையிடும் நடைமுறை இங்கு அமல்படுத்தப்படுகிறது. இதில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா்களுக்காக ஒவ்வோா் பதவிக்கும் 30 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com