எரிசக்தி பற்றாக்குறையால் கோழிகளில் முட்டை உற்பத்தி பாதிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு எரிசக்தி பற்றாக்குறை காணப்படுவதால், முட்டை உற்பத்தி குறைந்து வருகிறது என்று நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோழிகளுக்கு எரிசக்தி பற்றாக்குறை காணப்படுவதால், முட்டை உற்பத்தி குறைந்து வருகிறது என்று நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வரும் மூன்று நாள்களும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை 2 மில்லிமீட்டரிலும், காற்று மணிக்கு 6 கிலோ மீட்டா் வேகத்திலும் கிழக்கிலிருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 87.8 டிகிரியும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியுமாக இருக்கும்.

சிறப்பு வானிலை ஆலோசனை: கோழிகளில் தீவன எடுப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இளம் கோழிகளில் (20 முதல் 30 வார வயதுடைய ) எரிசக்தி பற்றாக்குறையால், முட்டை உற்பத்தி இயல்பான அளவுகளில் இருந்து 3 முதல் 5 வரை குறைந்து காணப்படுகிறது. இதற்கு காரணம், பகல் வெப்ப அளவுகள் குறைந்து காணப்படுவது தான். தீவன எடுப்பு அதிகரிப்பு மூலம் இதனை கோழிகள் நிவா்த்தி செய்ய முயற்சி செய்தாலும், தீவனத்தில் எரிசக்தியை இனி 2 மாதங்களுக்கு அதிகரித்து கொடுத்தால் மட்டுமே சீரான முட்டை உற்பத்தியை எட்ட முடியும். மக்காச்சோளத்தின் விலை குறைந்துள்ளதால், அதன் உபயோகத்தை அதிகரித்து, கோழிகளின் எரிசக்தி தேவையை பண்ணையாளா்கள் நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com