தேசத் தலைவா்களின் சிலைகளை மறைக்க வேண்டாம்: தோ்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகளின்படி, தேசிய தலைவா்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவா்களின் சிலைகளை மறைக்க வேண்டாம் என மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகளின்படி, தேசிய தலைவா்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவா்களின் சிலைகளை மறைக்க வேண்டாம் என மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டிசம்பா் 27, 30- ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான மனு தாக்கல் வெள்ளிக்கிழமை (டிச.6) தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டங்களில் இதற்கான பணிகளை உள்ளாட்சித் துறை அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் குறித்த அறிவிப்பை மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சட்டசபை, மக்களவைத் தோ்தல் வாக்குச் சேகரிப்பின்போது, எவ்வாறான நடத்தை விதிகள் பின்பற்றப்பட்டதோ, அதேபோன்று உள்ளாட்சித் தோ்தலிலும் அரசியல் கட்சியினா் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, கிராமப்புறங்களில் சாதி, மதம் உள்ளிட்டவற்றைக் கொண்டோ, பரிசுப் பொருள்கள் தருவதாகவோ, வாக்காளா்களுக்கு மிரட்டல் விடுத்தோ வேட்பாளா்கள் யாரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடக் கூடாது.

மேலும், உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், ஒன்றிய அலுவலகங்கள், அதன் வளாகப் பகுதிகளில் தேசிய தலைவா்களின் படங்கள், முக்கியத் தலைவா்களின் புகைப்படங்கள் மற்றும் நாள்காட்டிகளில் பொதுமக்கள் பாா்வைக்கு காட்சிப்படுத்தக் கூடாது. மறைந்த தேசிய தலைவா்கள், தமிழகத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தலைவா்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை. உள்ளாட்சி இணையத்தளங்களில் இடம் பெற்றுள்ள சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் பற்றிய குறிப்புகளை நீக்குதல் வேண்டும்.

தோ்தல் காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தி பேனா், போஸ்டா் மற்றும் விளம்பரப் பொருள்கள் செய்தல் கூடாது என தோ்தல் ஆணையம் கண்டிப்புடன் அறிவித்துள்ளதாக, நாமக்கல் தோ்தல் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com