நாமக்கல்லில் திமுக துண்டு பிரசுரம் விநியோகம்
By DIN | Published On : 05th December 2019 03:13 PM | Last Updated : 05th December 2019 03:13 PM | அ+அ அ- |

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டன.
கடந்த ஜனவரி மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் மற்றும் தமிழக அமைச்சா்களின் ஊழல் பட்டியல் அடங்கிய துண்டு பிரசுரங்களை, திமுக தலைமை உத்தரவின்பேரில், நாமக்கல் கிழக்கு மாவட்டதிமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான செ.காந்திசெல்வன், நாமக்கல் மணிக்கூண்டு, பேருந்து நிலையம், பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் விநியோகித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.-என்கே 5- திமுகநாமக்கல் மணிக்கூண்டு பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகித்த கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செ.காந்திசெல்வன்.