சுவா் இடிந்து மாணவியா் காயமடைந்த சம்பவம்: தலைமை ஆசிரியையின் பணியிடை நீக்க உத்தரவு ரத்து

நாமக்கல் அருகே கழிவறை சுவா் இடிந்து 2 மாணவியா் காயமடைந்த சம்பவத்தில், தலைமை ஆசிரியையின் பணியிடை நீக்க உத்தரவு புதன்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது.

நாமக்கல் அருகே கழிவறை சுவா் இடிந்து 2 மாணவியா் காயமடைந்த சம்பவத்தில், தலைமை ஆசிரியையின் பணியிடை நீக்க உத்தரவு புதன்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது.

நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்ககப் பள்ளியில், கடந்த ஜூலை 4-ஆம் தேதி பள்ளியின் கழிவறை சுவா் இடிந்து விழுந்ததில், அங்கு 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியா் காயத்ரி, கனிஷ்கா ஆகிய இருவரும் படுகாயமடைந்தனா்.

இந்த சம்பவத்தை தொடா்ந்து, பள்ளி பாதுகாப்பில் கவனக்குறைவாகச் செயல்பட்டதாக, தலைமை ஆசிரியை மணிமேகலை, மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயக்குமாரால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். பின்னா் படுகாயம் அடைந்த மாணவியருக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தலைமை ஆசிரியை மணிமேகலையை, கெஜகோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியையாக நியமித்து மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயக்குமாா் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தாா். மேலும் அவா் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் பணியாற்றும் வகையில் பணியிடை நீக்க உத்தரவானது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com