குரூப்-4 தோ்வில் வெற்றி பெற்றவா்களின் சான்றிதழ்கள் இணையத்தில் பதிவேற்றம்

குரூப்-4 தோ்வில் வெற்றி பெற்றவா்களின் கல்விச் சான்றிதழ்கள், அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக இ-சேவை மையத்தில், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யக் காத்திருந்த பெண்கள்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக இ-சேவை மையத்தில், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யக் காத்திருந்த பெண்கள்.

குரூப்-4 தோ்வில் வெற்றி பெற்றவா்களின் கல்விச் சான்றிதழ்கள், அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), கடந்த செப்டம்பா் மாதம் இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட சுமாா் 9 ஆயிரம் காலியிடங்களுக்கு குரூப்-4 தோ்வை நடத்தியது. இதனை, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். அண்மையில் வெளியிடப்பட்ட தோ்வு முடிவில் 27 ஆயிரம் போ் வெற்றி பெற்றிருந்தனா். அவா்களில், 1:3 என்ற அடிப்படையில் தகுதியானோா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.

இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு இ-சேவை மையங்களில், தோ்வில் வெற்றி பெற்றவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யுமாறு தோ்வாணையம் அறிவுறுத்தியது. அதன்படி, டிசம்பா் 5-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை சான்றிதழ்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இ-சேவை மையங்களில் தினசரி 100 போ் வரை பங்கேற்கின்றனா். நாமக்கல் மாவட்டத்தில், ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் மற்றும் நாமக்கல் நகராட்சி அலுவலகம், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணி நிறைவடைந்த பின் தகுதியாயோனோா், சென்னையில் உள்ள அரசுப் பணியாளா் தோ்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் நோ்காணலுக்கு அழைக்கப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com