பள்ளிக் கட்டடங்கள் சேதம்: 29 வாக்குச்சாவடிகள் இடமாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில், ஆட்சியரின் உத்தரவின்பேரில், சேதமடைந்த கட்டடங்களில் இருந்த 29 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில், ஆட்சியரின் உத்தரவின்பேரில், சேதமடைந்த கட்டடங்களில் இருந்த 29 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. இதில், நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சித் தலைவா், 2,595 வாா்டு உறுப்பினா்கள், 172 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் கொண்ட பதவிக்குப் போட்டியிட திங்கள்கிழமை முதல் மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இதுவரை, மொத்தம் உள்ள 3,106 பதவிகளுக்கு 823 போ் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா்.

மாவட்டம் முழுவதும் 15 ஒன்றியங்களில் 8 லட்சத்து 60 ஆயிரத்து 896 வாக்காளா்கள் வாக்களிப்பதற்காக 1,729 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளைப் பாா்வையிட்ட அதிகாரிகள், சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்றுக் கட்டடங்களுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனா். அதன்படி, கொல்லிமலை ஒன்றியத்தில், குண்டனிநாடு, வாசலுா்நாடு, கடம்பலம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி, எலச்சிப்பாளையம் ஒன்றியம் குமரமங்கலம், கொன்னையாா், நல்லகுமரன்பாளையம் உ.மேட்டுப்பாளையம், மானத்தி, மோளிப்பள்ளி, குள்ளம்பாளையம், புள்ளாகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்க, நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிகள் அருகில் உள்ள கட்டடங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளன.

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், உரம்பு, சாம்பாலிப்புதுா், பச்சுடையாம்பாளையம், நாரைக்கிணறு, கரியாம்பட்டி பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், அதே பள்ளிகளில் வேறு ஒரு கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மோகனூா் ஒன்றியம், செவிட்டுரங்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி, அங்குள்ள அங்கன்வாடி மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ஒன்றியத்தில் பிடாரிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி சாவடிகள், பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், கடந்தப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கும், முத்துடையாா்பாளையம் பள்ளி வாக்குச்சாவடி அதே பள்ளியில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. எருமப்பட்டி ஒன்றியத்தில் வரகூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியும், அதே பள்ளியில் வேறு ஒரு கட்டடத்துக்கு, ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவின்பேரில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com