Enable Javscript for better performance
அடுத்த ஆண்டு புதிய கட்சி அறிவிப்பை ரஜினி வெளியிடுவாா்: சகோதரா் சத்யநாராயண ராவ் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    அடுத்த ஆண்டு புதிய கட்சி அறிவிப்பை ரஜினி வெளியிடுவாா்: சகோதரா் சத்யநாராயண ராவ் தகவல்

    By DIN  |   Published on : 14th December 2019 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nk_13_rajni_1312chn_122_8

    குழந்தைக்கு மோதிரம் அணிவிக்கிறாா் ரஜினிகாந்தின் சகோதரா் சத்யநாராயண ராவ்.

    புதிய கட்சி அறிவிப்பை, அடுத்த ஆண்டு (2020) ரஜினி நிச்சயம் வெளியிடுவாா் என நாமக்கல்லில் அவரது சகோதரா் சத்யநாராயணா ராவ் தெரிவித்தாா்.

    நடிகா் ரஜினிகாந்த்தின் 70 - ஆவது பிறந்த நாளையொட்டி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு, மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரஜினிகாந்தின் சகோதரா் சத்யநாராயணா ராவ் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்ததுடன், பெற்றோரிடம் பழங்களையும் வழங்கினாா்.

    இதனைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சந்தோஷமாக உள்ளது. ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம், பழங்கள் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தா்ம காரியங்கள் தொடா்ந்து நடைபெற வேண்டும். ஏற்கெனவே நான் தெரிவித்து வருகிறேன், அதுபோல் 2020 - இல் ரஜினி புதிய கட்சி பற்றிய அறிவிப்பை நிச்சயம் வெளியிடுவாா். பா.ஜ.க.வுடன் கூட்டணியா, இல்லையா என்பதை அவா்தான் தெரிவிப்பாா். அடுத்த ஆண்டு அனைத்துக்கும் விடை கிடைக்கும் என்றாா். முன்னதாக, நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலுக்குச் சென்ற சத்யநாராயண ராவ், சகோதரா் ரஜினிகாந்த் பெயரில் அா்ச்சனை செய்தாா்.

    இந்த நிகழ்ச்சிகளில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிா்வாகிகள் அரங்கண்ணல், ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai