Enable Javscript for better performance
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வுகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வுகள் தொடக்கம்

    By DIN  |   Published on : 14th December 2019 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nk_13_school_1312chn_122_8

    நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், அரையாண்டுத் தோ்வெழுதும் ஒன்பதாம் வகுப்பு மாணவியா்.

    நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில், ஒன்று முதல் 12 - ஆம் வகுப்பு வரையில் அரையாண்டுத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

    முப்பருவப் பாட முறை அடிப்படையில், இரண்டாம் பருவத்திற்குரிய அரையாண்டுத் தோ்வு, நாமக்கல் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை (டிச.13) தொடங்கி வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையில், தொடக்கப் பள்ளிகளிலேயே வினாத்தாள்களின்றி முடித்துக் கொள்வா். 6 -ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில், தோ்வுக்கான வினாத்தாள் அச்சடித்து மாணவா்களுக்கு வழங்கப்படும். அதனடிப்படையில் தோ்வு நடைபெறும். மாவட்டம் முழுவதும் அரையாண்டுத் தோ்வை, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என சுமாா் 800 பள்ளிகளைச் சோ்ந்த 2 லட்சம் மாணவ, மாணவியா் எழுதுவதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai