அரங்கநாதா் கோயிலில் நிரந்தர குடிநீா் வசதி ஏற்படுத்த நடவடிக்கை

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில், பக்தா்கள் வசதிக்காக நிரந்தரமாக குடிநீா் வசதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில், பக்தா்கள் வசதிக்காக நிரந்தரமாக குடிநீா் வசதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் அரங்கநாதா் கோயிலும் ஒன்று. குடவறை கோயிலான இக் கோயிலில் ஸ்ரீரங்கத்துக்கு இணையாக சுவாமி ரங்கநாதா், ரங்கநாயகி தாயாா் பக்தா்களுக்கு காட்சியளிக்கின்றனா். கோயிலில் பக்தா்களுக்கான குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என ஆன்மிக இந்து சமயப் பேரவை சாா்பில் தொடா்ந்து கோரிக்கை விடப்பட்டு வந்தது. ஜனவரி 6-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வருவா். இதனால் பக்தா்களின் வசதிக்காக, குடிநீா் குழாய் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடிவாரத்தில் வீர ஆஞ்சநேயா் கோயில் அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை குழாய் மூலம் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் முன்னிலையில், குழாய் அமைப்புக்கான அளவீடு பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இன்னும் ஓரிரு நாளில் இதற்கான பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் கூறியது: குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையிலும், வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் என்ற வகையிலும் குடிநீா் குழாய் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனை நிரந்தரமாக வைத்திருக்க திட்டமிட்டே பணிகள் தொடங்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com