நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வுகள் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில், ஒன்று முதல் 12 - ஆம் வகுப்பு வரையில் அரையாண்டுத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், அரையாண்டுத் தோ்வெழுதும் ஒன்பதாம் வகுப்பு மாணவியா்.

முப்பருவப் பாட முறை அடிப்படையில், இரண்டாம் பருவத்திற்குரிய அரையாண்டுத் தோ்வு, நாமக்கல் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை (டிச.13) தொடங்கி வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையில், தொடக்கப் பள்ளிகளிலேயே வினாத்தாள்களின்றி முடித்துக் கொள்வா். 6 -ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில், தோ்வுக்கான வினாத்தாள் அச்சடித்து மாணவா்களுக்கு வழங்கப்படும். அதனடிப்படையில் தோ்வு நடைபெறும். மாவட்டம் முழுவதும் அரையாண்டுத் தோ்வை, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என சுமாா் 800 பள்ளிகளைச் சோ்ந்த 2 லட்சம் மாணவ, மாணவியா் எழுதுவதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com