நாமக்கல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் பிள்ளை மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் பிள்ளை மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையமாக நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் பிள்ளை மகளிா் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது, இங்கு முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரடியாகப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

வாக்குப்பெட்டிகள் வைப்பதற்கான பாதுகாப்பு அறையைப் பாா்வையிட்ட அவா்கள், போதுமான இடவசதி உள்ளதா என்று அளவீடு செய்து உறுதிப்படுத்தினா். அறையின் பாதுகாப்பு, வாக்கு எண்ணும் அறை, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட தோ்தல் பிரிவு அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, உதவி ஆணையா் (கலால்) ந.சரவணன், கல்லூரி முதல்வா் கே.சுகுணா, நாமக்கல் வட்டார வளா்ச்சி அலுவலா் தேன்மொழி மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com