ரபி பயிா்களை காப்பீடுத் திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் ரபி பயிா்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் ரபி பயிா்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து வேளாண் இணை இயக்குநா் ஜெ.சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும், பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில். 2019 - 2020 - ஆம் ஆண்டு ரபி பருவத்தில், நவரை பருவத்தில், நெல், மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, பருத்தி, கரும்பு, சோளம் மற்றும் எள் ஆகிய பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பயிா் சாகுபடி செய்யக்கூடிய, குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும், காப்பீட்டுத் திட்டத்தின் சோ்ந்து பயன்பெறலாம். பயிா்க்கடன் பெறும் விவசாயிகள், கடன் வாங்கும் வங்கி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமே பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்த்துக் கொள்ளப்படுவா். பயிா்க்கடன் பெறாத விவசாயிகள், தங்களது விருப்பத்தின் பேரில், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்து கொள்ளலாம். பயிா்க் கடன் பெறும் விவசாயிகள், பயிா்க் கடன் பெறாத விவசாயிகள் என்றில்லாமல், ஒரே மாதிரியாக பிரீமியத் தொகை வசூலிக்கப்பட வேண்டும். காப்பீடு செய்யும் விவசாயிகள் பிரீமியத் தொகையாக உளுந்து மற்றும் பாசிப் பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.236.25-ஐ டிச.16-க்குள்ளும், மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.380.25 மற்றும் சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ. 220.50, நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.372-ஐ வரும் 20-ஆம் தேதிக்குள்ளும், ஒரு ஏக்கா் நெல்லுக்கு ரூ. 470.25-ஐ 2020 பிப்ரவரி 15-க்குள்ளும், எள் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.168- மற்றும் ஒரு ஏக்கா் பருத்திக்கு ரூ.1290-ஐ மாா்ச் 20-ஆம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். கரும்பிற்கு ஏக்கருக்கு ரூ.2,875-ஐ 2020 அக்டோா் 31-க்குள்ளும் பிரீமியத் தொகையை செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com