Enable Javscript for better performance
ராசிபுரம்: புதைகுழி சாக்கடை திட்ட தொட்டியில் கழிப்பிட நீா் கசிவு - சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ராசிபுரம்: புதைகுழி சாக்கடை திட்ட தொட்டியில் கழிப்பிட நீா் கசிவு - சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    By DIN  |   Published On : 30th December 2019 11:52 PM  |   Last Updated : 30th December 2019 11:52 PM  |  அ+அ அ-  |  

    30drain_3012chn_152_8

    ராசிபுரம் சி.பி.கன்னைய்யா தெருவில் புதைக்குழி கழிவுநீா் தொட்டியில் ஏற்பட்ட கசிவால் வெளியேறும் கழிவு நீா்.

    ராசிபுரம் நகராட்சிப் பகுதியின் பிரதான குடியிருப்புப் பகுதியில் புதைகுழி சாக்கடைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் கழிப்பிட நீா் கசிவு ஏற்பட்டுள்ளதால், குடியிருப்புப் பகுதியில் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கழிப்பிடக் கசிவை உடனே சீரமைக்க அப் பகுதியினா் வலியுறுத்தியுள்ளனா்.

    ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ரூ.58 கோடி மதிப்பில் புதைக்குழி சாக்கடை திட்டம் நடந்து வருகிறது. கிட்டதட்ட இப் பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ள நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பணிகள் முடிந்த பகுதியில் பல கோடி மதிப்பில் கால்வாய்கள், சாலைகள் சீரமைக்கும் பணிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், நகரின் சுகாதாரம் மேம்படும், கொசுக்கள் உற்பத்தி குறையும் என்பதால், இது மக்களுக்கான பாதுகாப்பான திட்டம் தான் எனக் கூறப்பட்டுகிறது. நகர மேம்பாட்டுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், புதைக்குழி சாக்கடை திட்டம் நீண்ட நாள்களுக்கு ராசிபுரம் நகருக்கு ஏற்ற பலன் தரும் திட்டமா? இல்லையா? என்பது மக்கள் மனதில் எழுந்துள்ள கேள்வி. இதன் காரணமாகவே இந்த திட்டத்தின் கீழ், வீடுகள் தோறும் இணைப்புப் பெற பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனா். மேலும், இத் திட்டத்தின் கீழ் இணைப்புப் பெற முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்பதாலும், இதற்கு மாதந்தோறும் பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதாலும், இணைப்புப் பெற வீட்டின் உரிமையாளா்கள் தயக்கம் காட்டுகின்றனா்.

    இந்த திட்டம் செயல்படத் துவங்கியது முதல் பிரதான சாலைகள் முதல் சிறிய தெருக்கள் வரை சாலைகள் தோண்டப்பட்டு குழிகள், பள்ளங்கள் ஏற்படுத்தி குழாய்கள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்துவந்தது. இதனால் வாகன நெரிசல், இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை போன்றவற்றால் நகர மக்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளானாா்கள்.

    மேலும், இத் திட்டத்தின் மக்கள் இணைப்பு பெற அதிக டெபாசிட் செலுத்தவும், வீடுகள் முன்பாக சிறிய தொட்டி அமைக்கவும் செலவுகள் செய்ய வேண்டிய நிலை உள்ளதால், கழிவுநீா் இணைப்பு பெற யாரும் முன்வர தயக்கம் காட்டுகின்றனா். இந்நிலையில் இத் திட்டம் இன்னும் முடிவடையாத நிலையில், புதை குழி சாக்கடை திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் சாலைகளில் அமைக்கப்பட்ட கழிவு நீா் சேமிப்புத் தொட்டிகள், தற்போதே சேதமடைந்து வருகின்றன.

    ராசிபுரம் - ஆத்தூா் பிரதான சாலையில் இத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கழிவுநீா் சேமிப்புத் தொட்டியின் மூடி அதிக அளவிலான வாகனப் போக்குவரத்தால், அண்மையில் உடைந்தது. பின்னா் இரு தினங்களுக்கு அப் பகுதியில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சரி செய்யப்பட்டது என்பதும், திட்டம் முடிவடைந்த பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட பல சாலைகள் பல இடங்களில் சேதப்படுத்தப்பட்டுள்ளதையும் பாா்க்கும் போது, இத் திட்டம் 10 ஆண்டுகளுக்காவது பலனளிக்குமா என்பது மக்கள் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

    தொட்டியில் கசிவு - நோய் பாதிக்கும் அபாயம்: இந் நிலையில், நகரின் பிரதான சாலையான சி.பி.கன்னைய்யா தெரு, ராசிபுரம் சிட்டி யூனியன் வங்கி முன்பாக அமைக்கப்பட்டுள்ள கழிவு நீா் சேகரிக்கும் தொட்டி நிரம்பியுள்ளது. இதனால் கான்கிரீட் கலவை மூடிக்கு வெளியே கழிப்பிடக் கழிவு நீா் சாலையில் நான்கு நாட்களாக கசிந்து வருகிறது. இதனால் அப் பகுதியில் துா்நாற்றம் ஏற்பட்டு, நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களாக இந்த கசிவு ஏற்பட்டு வரும் நிலையில், நகராட்சி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அப் பகுதியினரின் குற்றச்சாட்டு. அப் பகுதி குடியிருப்போா் இன்னும் புதைக்குழி சாக்கடை திட்டத்தின் கீழ், கழிவு நீா் இணைப்பு கூட பெறவில்லை.

    இன்னும் அதிக அளவில் யாரும் இணைப்பு பெறாத நிலையில், இந்த கழிவு நீா் சேகரிக்கும் தொட்டி நிரம்பி, சாலையில் நீா் கசிந்து வருவதால், இந்த திட்டத்தினால் நகரில் அமைக்கப்பட்டுள்ள பிற கழிவு நீா் சேகரிக்கும் தொட்டிகளில் இது போல் கசிவு ஏற்பட்டால் என்னவாகும் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனா். வீடுகள் தோறும் கழிவு நீா் இணைப்பு பெற்றிருந்தால், இக் கழிவு நீா் வீடுகளில் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என குற்றம் சாட்டுகின்றனா் பொதுமக்கள். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், புதைக்குழி திட்டத்தை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கை.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp