Enable Javscript for better performance
மானிய விலையில் கால்நடைகளுக்கான தீவனம் வழங்க வேண்டும்: குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மானிய விலையில் கால்நடைகளுக்கான தீவனம் வழங்க வேண்டும்: குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 01st February 2019 04:10 AM  |   அ+அ அ-   |    |  


    வறட்சி காரணமாக தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். 
    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 
    கூட்டத்தில் விவசாயிகள்பேசியது:-
    பெரியதம்பி: கடும் வறட்சி நிலவி வருவதால், கால்நடைகளுக்கான தீவனத்தை மானிய விலையில் வழங்க வேண்டும். ஆவின் மூலம் தீவனம் மூட்டைக்கு ரூ.100 வீதம் மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதை மீண்டும் வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.
    சுந்தரம்: வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் கலப்படம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இதனால் டன் ரூ.3000-க்கு விற்க வேண்டிய கரும்பு, ரூ.1,500-க்குதான் விலை போகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். வெல்ல ஆலைகளில் கலப்படத்தைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
     துரைசாமி: நாமக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மக்காச்சோளம் உள்பட வறட்சியால் பயிர்கள் கருகியுள்ளன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். 
    சரவணன்: பால் கூட்டுறவு சங்கங்களில் பாலுக்கான நிலுவைத் தொகை 40 நாள்களுக்கு மேலாகியும் வழங்கப்படாமல் உள்ளது. குறைந்தபட்சம் 15 நாட்களுக்குள்ளாவது பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    உதவி வேளாண் அலுவலர்கள் விவசாய நிலங்களுக்கு கள ஆய்வுக்கு வருவதில்லை. இதனால் விவசாயிகளுக்கான அரசு திட்டங்கள், மானியங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு பரவலாக கிடைக்காமல் ஒரு சிலரே தொடந்து பலன் அடைந்து வருகின்றனர். 
    பெரியசாமி: பொத்தனூரில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொப்பரைத் தேங்காய் விற்பனை செய்ய ரூ. 1 வீதம் கமிஷன் வழங்கப்படுகிறது. எனினும், அங்கு ரூ. 10 வீதம் வசூலிக்கப்படுகிறது. பொத்தனூரில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் மூலம் வாழைத்தார் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    குப்புதுரை: ஒரு ஹெக்டேருக்கு ரூ. 200 வீதம் தண்டத்தீர்வைத் தொகை வசூலிக்கப்பட உள்ளது.  வறட்சியைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொகையை ரூ. 10 அல்லது ரூ.20 வீதம் குறைக்க வேண்டும். ராஜவாயக்கால் ஆயக்கட்டுப் பகுதி முப்போகம் விளைந்த விளைநிலங்களாகும். எனவே, ராஜவாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   பரமத்திவேலூர் தொடங்கி மோகனூர் வரை கோரை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அதன் விலை குறைந்துள்ளது. இக்கோரையை பாதுகாப்பாக வைக்க கிடங்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
     சந்திரசேகேரன்: கல்குறிச்சி வெள்ளாளப்பட்டி கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்தில் இரவு வேளையில் மின்விளக்கு எரிவதில்லை. அதேபோல்,  கால்வாய் வசதியில்லாததால் கழிவுநீர் விளைநிலங்களுக்குள் செல்கிறது. மேலும், கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ராஜேந்திரன்: கரும்பு கட்டையை அழிப்பதற்கு உழவு செய்ய தனியார் டிராக்டர் உரிமையாளர்களிடம் ஏக்கருக்கு ரூ.3,000 வரை வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் வேளாண்மைபொறியியல் துறை மூலம் கரும்பு காடு உழவுக்கான பிரத்யேக கலப்பை பொருத்திய டிராக்டரை குறைந்த வாடைகைக்கு அளிக்க வேண்டும்.  
    இவ்வாறு விவசாயிகள்பேசினர்.
    விவசாயிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்து  ஆட்சியர்  மு.ஆசியா மரியம் பேசுகையில், ஆவினில் பால் நிலுவைத்தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கிடங்கு வசதி உள்ளது. அந்தக் கிடங்குகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
    இதேபோல், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி பேசுகையில்,  தண்டத்தீர்வைத் தொகையான நிலவரி தமிழகம் முழுவதும் உள்ளது. இந்த வரியை குறைக்க அரசுக்குப் பரிந்துரைக்க இயலாது.  சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பேசி அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல விவசாயிகள் முயற்சிக்கலாம் என்றார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp