மின்மாற்றி அமைக்க எதிர்ப்பு
By DIN | Published On : 06th February 2019 08:44 AM | Last Updated : 06th February 2019 08:44 AM | அ+அ அ- |

குடியிருப்பு பகுதியில் மின்மாற்றி அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், அத்தனூர் பேரூராட்சி 3ஆவது வார்டு, தட்டான்குட்டைபுதூர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: அருந்ததியர் காலனியில் குடியிருப்புப் பகுதியில் மின்மாற்றி அமைக்க உள்ளனர். இங்கு மின்மாற்றி அமைத்தால், காற்று வேகமாக வீசும் காலங்களில் தீப்பொறி ஏற்பட்டு குடிசைகளுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, மின்மாற்றியை ஊருக்குள் அமைக்க வேண்டாம். வெளியில் ஏதாவது இடம் ஒதுக்கி அந்த இடத்தில் அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...