சுடச்சுட

    

    ஆசிரியர் பணியிடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 12th February 2019 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     திருச்செங்கோடு நெசவாளர் காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பார்த்தீபன். இவர் அண்மையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது, கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
     இந்த நிலையில், பார்த்தீபன் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், இவருக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.
     இதையறிந்து, மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை பள்ளிக்குச் செல்லாமல் நுழைவு வாயில் முன்பாக தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் ஆசிரியர் பார்த்தீபனை பணியிட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர்.
     தகவலின்பேரில் கல்வித் துறையினரும், காவல் துறையினரும் விரைந்து வந்து சமரசம் செய்தனர். இதைத் தொடர்ந்து, மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai