சுடச்சுட

  

  தமிழ்நாடு சோட்டகான் கராத்தே பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
   இந்தப் போட்டிகளை ராசிபுரம் எஸ்ஆர்வி பள்ளிகளின் செயலர் பி.சுவாமிநாதன், ஸ்ரீவித்யா மந்திர் பள்ளிச் செயலர் எஸ்.சந்திரசேகர், ஸ்ரீவித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளிச் செயலர் என்.மாணிக்கம் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
   கட்டா, குமிட்டி, கோபுடோ போன்ற பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் சேலம், ஈரோடு, தருமபுரி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
   சோட்டகான் கராத்தே பள்ளியின் தலைமைப் பயிற்சியாளர் வி.சரவணன், பயிற்சியாளர்கள் பத்மநாபன், கிருஷ்ணன், தாமரைச்செல்வன், வெங்கடாசலம், மாணிக்கம், பிரபு, பன்னீர், தனலட்சுமி, ராஜகுமாரி, கோகுலா, சாந்தி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.
   போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் அதிக புள்ளிகள் பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai