லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா
By DIN | Published On : 12th February 2019 08:57 AM | Last Updated : 12th February 2019 08:57 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூர் அஹ்ரகாரத்தில் உள்ள லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, கடந்த 8ஆம் தேதி முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றுவந்தன. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாக் குழுவினர் செய்திருந்தனர்.