சுடச்சுட

  

  பெட்ரோல் ஸ்கூட்டர்  வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு முகாம் நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் தலைமை வகித்தார். இதில், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்கள்  மணிகண்டன்,   சதீஷ்குமார்,  வாகன ஆய்வாளர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளைப் பரிசோதித்து பயனாளிகளைத் தேர்வு செய்தனர். 
  இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டனர்.
  ஸ்கூட்டர் பெற தகுதியுள்ள பயனாளிகளுக்குக் கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai