சுடச்சுட

  

  மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி: ஞானமணி கல்வியியல் கல்லூரி முதலிடம்

  By DIN  |   Published on : 13th February 2019 10:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையேயான  கலை நிகழ்ச்சிகள், தடகளப் போட்டிகளில்  ஞானமணி கல்வியியல் கல்லூரி முதலிடம் பெற்றது.
  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் இந்தப் போட்டிகள் கே.எஸ்.ஆர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றன. இதில், ஞானமணி கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள்
  பங்கேற்றனர். 
  போட்டிகளில்  ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல் பிரிவில் துரைராஜ் என்ற மாணவன் முதலிடமும்,  ஈட்டி எறிதலில் பிரபு என்ற மாணவன் முதலிடமும், குண்டு எறிதலில் முனியரசு என்ற மாணவன் இரண்டாமிடமும், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஸ்ரீராஜ் என்ற மாணவன் இரண்டாமிடமும், 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் துரைராஜ், கோடீஸ்வரன், நவீன், ஸ்ரீராஜ்குமார், மணிகண்டன் ஆகியோர் இரண்டாமிடமும் பெற்றனர்.
  பெண்கள் பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குமுதவல்லி என்ற மாணவி முதலிடமும், குண்டு எறிதல் போட்டியில் மோனலிசா என்ற மாணவி முதலிடமும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அஜிதா என்ற மாணவி இரண்டாமிடமும், 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் அஜிதா, ரேணுகாதேவி, டயானா, குமுதவல்லி ஆகியோர் இரண்டாமிடமும், ஈட்டி எறிதல் பொட்டியில் ஜோதிமணி என்ற மாணவி மூன்றாமிடமும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குமுதவல்லி என்ற மாணவி மூன்றாமிடமும் பெற்றனர்.  
  இதன்படி,  ஞானமணி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் 5 தங்கப் பதக்கங்களும், 6 வெள்ளிப் பதக்கங்களும், 2 வெண்கலப் பதக்கங்களும் பெற்றனர்.  இதையடுத்து,  ஒட்டுமொத்த கோப்பையை ஞானமணி கல்லூரி அணி பெற்றது.  துரைராஜ்  தனிநபர் கோப்பையைக் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, இவர்களை கல்லூரித்  தலைவர்  தி.அரங்கண்ணல்,  தாளாளர் பி.மாலாலீனா, முதன்மை செயல் அதிகாரி கே.விவேகானந்தன், முதன்மை நிர்வாக அலுவலர் பி.பிரேம்குமார், ஞானமணி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் கவிதா, உடற்கல்வி ஆசிரியர் நிஷா உள்ளிட்டோர்
  பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai