சுடச்சுட

  

  நாமகிரிப்பேட்டையில் விவசாயிகள் குழுக் கூட்டம் நடைபெற்றது.
   வேளாண்மை துறை சார்பில்  நடைமுறையில் உள்ள  நீடித்த,  நிலையான மானாவரி வேளாண்மை இயக்கத் திட்டத்துக்காக, நாமகிரிப்பேட்டை வட்டாரத்துக்குள்பட்ட மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட இரா.புதுப்பட்டி வருவாய் கிராமம் தேர்வு
  செய்யப்பட்டுள்ளது. 
  2018-19-ஆம் நிதி ஆண்டில் இந்த ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்படவுள்ள துறைவாரியான பங்களிப்புகளை மானாவாரி விவசாயக் குழுக்களுக்கு விளக்கிடும் வகையில் இரா.புதுப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
  கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சு.ராஜேஸ்வரி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் மோகன்பாரதி, வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் பெ.மோகன்,  வேளாண்மை அலுவலர் பசுபதி,  உதவி வேளாண்மை அலுவலர் ராமமூர்த்தி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் செ.ஸ்ரீதரன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மு.தியாகராஜன், வெ.விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai