விதைகளை பரிசோதிக்க விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்

சாகுபடிக்கு பயன்படுத்தும்போது விதைகள் தரமானதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுமாறு விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அறிவுறுத்தி உள்ளது.

சாகுபடிக்கு பயன்படுத்தும்போது விதைகள் தரமானதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுமாறு விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய அலுவலர் சு.சித்திரைச் செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  
நல்விதை என்பது சரியான விகிதத்தில் வரையறுக்கப்பட்டுள்ள முளைப்புத் திறன், ஈரப்பதம், இனத்தூய்மை மற்றும் பிறரக கலப்புத் தன்மை இல்லாமை, பூச்சி நோய் தாக்குதல் இல்லாமை போன்ற காரணிகளை கொண்டிருக்க வேண்டும். 
இவ்விவரங்கள் அனைத்தும் அரசு சான்று பெற்ற விதைகளின் கொள்கலன் பைகளில் இணைக்கப்பட்டுள்ள சான்று அட்டை மற்றும் உற்பத்தியாளர் அட்டைகளில் வழங்கப்பட்டிருக்கும். இதனைக் கொண்டு விவசாயிகள் விதை கொள்முதல் செய்கையில் அதன் தரத்தை அறிந்து கொள்ள முடியும்.
மேலும், சான்று அட்டையில் பயிரின் பெயர், ரகம், ஆய்வுத் தேதி, காலாவதி தேதி போன்ற விவரங்களும் வழங்கப்
பட்டிருக்கும். 
எனவே, ஒவ்வொரு முறையும் விதைகள் வாங்கும்போது மேற்குறிப்பிட்ட விவரங்கள் இருக்கின்றனவா என்பதை சரிபார்த்தும், அதற்கான ரசீதையும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை விவசாயிகள் ஏற்கெனவே சேமித்து வைத்துள்ள  விதைகளை சாகுபடிக்கு பயன்படுத்துவதாக இருப்பின், விதைப்புக்கு முன்பாக நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் 49/97,  காமராஜர் நகர், குளக்கரை தெரு, நாமக்கல் என்ற முகவரியில் இயங்கும் விதைப் பரிசோதனை நிலையத்தில் ஒரு விதை மாதிரிக்கு ரூ.30 செலுத்தி பரிசோதித்து கொள்ளலாம். 
இதனால் விதைகளின் தரமறிவதுடன்,  விதைப்பும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com