நாமக்கல்லில் எம்.ஜி.ஆர். பூங்கா திறப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளையொட்டி, நாமக்கல் குளக்கரையில் எம்.ஜி.ஆர். பூங்கா ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளையொட்டி, நாமக்கல் குளக்கரையில் எம்.ஜி.ஆர். பூங்கா ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தொகுதி மேம்பாட்டு நிதியில், நாமக்கல் குளக்கரை திடலில் ரூ.20 லட்சம் மதிப்பில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய, எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்ட பூங்கா அமைக்கப்பட்டது. மேலும், நாமக்கல் - துறையூர் சாலையில் இருந்து ரயில் நிலையத்துக்கு ரூ.2.70 கோடி மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இவற்றின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்றது.
 விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் வரவேற்றார். தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, பூங்காவையும், ரயில் நிலைய சாலையையும் திறந்து வைத்தார். சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா, நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவையொட்டி, கிராமிய இசை கலைஞர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com