முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் மார்ச் 1-இல் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 28th February 2019 09:26 AM | Last Updated : 28th February 2019 09:26 AM | அ+அ அ- |

மல்லசமுத்திரம் மஹேந்ரா கல்வி நிறுவனங்கள், தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை, மஹேந்ரா கல்லூரி வளாகத்தில் மார்ச் 1-இல்
நடத்துகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100 - க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் பங்கு பெருகின்றன . இந்த முகாமில் பொறியியல், டிப்ளமோ பட்டதாரிகள், ஐடிஐ, 12-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு பயின்றவர்கள், தையல் பயிற்சி பெற்றோர் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்ள வசதியாக சேலம், நாமக்கல், ராசிபுரம், ஈரோடு, பரமத்திவேலூர், மோகனூர், கரூர், திருச்செங்கோடு, எடப்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.