சுடச்சுட

  

  பரமத்தி வேலூரில் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் வேலூர் மற்றும் பாலப்பட்டி கோட்ட கரும்பு விவசாயிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
   மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாகக் குழுத் தலைவர் சுரேஷ்குமார் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.  இயக்குநர்கள் ராக்கியண்ணன்,சுப்பிரமணியன், குப்புத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
  கூட்டத்தில் பாலப்பட்டி மற்றும் பரமத்தி வேலூர் கோட்டத்திற்கு உட்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை வழங்க வேண்டும்.  வறட்சியின் போது பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு கருணைத்தொகை வழங்க வேண்டும்.   கரும்பு வெட்டுக்கூலியை ஒரே சீராக வழங்க கூலி நிர்ணயம் செய்ய வேண்டும்.  கரும்பு நடவை அதிகரிக்க மாணிய விலையில் கரும்பு கரணை வழங்க வேண்டும்.  ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யவும், நீர் நிலைகளை உயர்த்தவும் பரமத்தி வேலூர் மற்றும் மோகனூர் பகுதியில் இரண்டு தடுப்பணைகள் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். 
  கூட்டத்தில் இயக்குநர்கள் நவலடி,  வரதராஜன், கரும்பு பெருக்கு ஆலுவலர் நவநீதன்,  கரும்பு அலுவலர்கள் கலாவதி, மணிவேல் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  முடிவில் துணைத் தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai